Friday, January 26, 2007

அருள்வாயே



நாளும் சின்றின்பம் கண்டேன்
வாழ்வின் போதையில் திலைத்தேன்
பாவம் செய்ய அஞ்ஞேன்
புண்ணியம் செய்ய மறந்தேன்


கண்ணிருந்தும் குருடனாய்
கண்ட இடம் போனேன்
மதியிருந்தும் மனிதாய்
வந்த பயனை மறந்தேன்
ஆலயமென்ற ஆழ்மனதை
சாக்கடை என்றே ஆக்கினேன்



உனை நினைத்து விட்டேன் - முருகா
எனை மறு - பதனிடு செய்து விட்டேன்
நாளை என்ற ஒர் நாளில்
இந்த எளியோனுக்கு அருள்வாயோ
பாவ பட்ட மனித வாழ்வினிலிருந்து
மோச்சம் பெற்று தருவாயோ!



இப்பிறப்பும் எனக்கு வேண்டாம்- இனி
எப்பிறப்பும் எனக்கு வேண்டாம்
பிறவா வரம் தந்து என்னை மனிப்பாயா!!

1 comment:

கோபிநாத் said...

அன்பு தமிழன் திருகுமரன் அவர்களுக்கு என் வணக்கங்கள்...

யதார்த்த வரிகளில் அருமையான கவிதைகள்...
(ஆனால் ஒரு சோக இழை ஒடுகிறது)