Saturday, January 27, 2007

காலங்களின் கோலங்கள்

சின்ன சிறு வயதினிலே
அந்த ஆத்தங்கரை ஓரத்திலே
ஆடிப்பாடி மகிழ்ந்து வந்தோம்
அந்த வாழ்க்கை ஏங்கு போனதுவோ
அந்த நினைவுகள் கண்களிலே
இன்னும் படமாய் மலந்திருக்க
அதை கொஞ்சம் நினைக்கையிலே
கண்களில் நீர் வழிய.........

அந்த வாழ்க்கை இனி
இங்கு வாராதோ
அந்த சுகம் இனி
நம்மை சேராதோ
அந்த காற்று நமை இனி
தீண்டாதோ
நம் உள்ளம் கவலை மறந்து
பாடாதோ

ஏன் இந்த மனித வாழ்க்கை?
சிறு வயதில் இன்பத்தின் சேர்க்கை
போகும் காலத்தில் துன்பத்தின் கோர்க்கை
இது மனித உயிர்க்கு விதிக்க பட்ட விதியா?

1 comment:

jeevagv said...

படங்களுடனும், இனிய வரிகளுடனும் உங்கள் கருத்துக்களை அமுதாக படைக்கின்றீர்.
கொள்வார் பற்றி கவலை இன்றி தொடர்ந்து படைக்கவும், நன்றி.