Monday, March 12, 2007

வசந்த கால கோலங்கள்


இசை ஞானி இளையராஜாவும்,கவி பேரராசு கண்ணதாசனும் இணைந்த முதல் இசை சங்கமம்

Sunday, February 18, 2007

தமிழ் தாகம்





இருள் சூழ்ந்த
வானில்
அங்கங்கே வெளிச்சங்கள்




இதயத்துடிப்பின்
நாதத்தில்
தமிழ்த்தாக கவிதைகள்




இமைக்காமல் பார்க்கிறேன்
இனம் காக்கும் தமிழனை!!
போராட்டங்களைத் தாண்டி
போராளியாய் போர்முனையில்
உயிர் விடும் என் தமிழனை




தமிழனாய் தரணியில்
பிறந்த பெருமையை
நான் கண்டேன் -உன்னாலே
என் ஈழத்தமிழனே!!

Saturday, January 27, 2007

காலங்களின் கோலங்கள்

சின்ன சிறு வயதினிலே
அந்த ஆத்தங்கரை ஓரத்திலே
ஆடிப்பாடி மகிழ்ந்து வந்தோம்
அந்த வாழ்க்கை ஏங்கு போனதுவோ
அந்த நினைவுகள் கண்களிலே
இன்னும் படமாய் மலந்திருக்க
அதை கொஞ்சம் நினைக்கையிலே
கண்களில் நீர் வழிய.........

அந்த வாழ்க்கை இனி
இங்கு வாராதோ
அந்த சுகம் இனி
நம்மை சேராதோ
அந்த காற்று நமை இனி
தீண்டாதோ
நம் உள்ளம் கவலை மறந்து
பாடாதோ

ஏன் இந்த மனித வாழ்க்கை?
சிறு வயதில் இன்பத்தின் சேர்க்கை
போகும் காலத்தில் துன்பத்தின் கோர்க்கை
இது மனித உயிர்க்கு விதிக்க பட்ட விதியா?

Friday, January 26, 2007

அருள்வாயே



நாளும் சின்றின்பம் கண்டேன்
வாழ்வின் போதையில் திலைத்தேன்
பாவம் செய்ய அஞ்ஞேன்
புண்ணியம் செய்ய மறந்தேன்


கண்ணிருந்தும் குருடனாய்
கண்ட இடம் போனேன்
மதியிருந்தும் மனிதாய்
வந்த பயனை மறந்தேன்
ஆலயமென்ற ஆழ்மனதை
சாக்கடை என்றே ஆக்கினேன்



உனை நினைத்து விட்டேன் - முருகா
எனை மறு - பதனிடு செய்து விட்டேன்
நாளை என்ற ஒர் நாளில்
இந்த எளியோனுக்கு அருள்வாயோ
பாவ பட்ட மனித வாழ்வினிலிருந்து
மோச்சம் பெற்று தருவாயோ!



இப்பிறப்பும் எனக்கு வேண்டாம்- இனி
எப்பிறப்பும் எனக்கு வேண்டாம்
பிறவா வரம் தந்து என்னை மனிப்பாயா!!

Sunday, January 21, 2007

இன்று நாளை

இன்று!!
விதைத்து-விட்டேன்
இனிய இலட்சியங்கள்
நினைத்து-விடேன்
அழகிய ஆசைகள்
செதுக்கி விட்டேன்
எழிய ஏணிப்படிகள்

நாளை!!
விதைத்த விதைகள்
வேர் விடப்படும்
நினைத்த ஆசைகள்
நிறை வேறட்டும்
செதுக்கிய ஏணிப்படிகள்
வெற்றிப்படிகள் ஆகட்டும்

தமிழனே


அழகிய தமிழ் மலர்
நாளும் மலர்ந்திருக்க
அதை சூட தமிழர்
இல்லையோ!!

மண்ணில் நல் கவிதை
சொன்ன பாரதி
அவன் சொல்லை
யாரும் அறியவில்லையோ!!!


தமிழ் என்ற சொல்
சொன்னால் வாய் மணக்கும்
அதை அறிந்தால்
உன் புகழ் மணக்கும்

நல்ல தமிழ் வீணை
இருக்க
பிற வாத்தியம்
அறிய துடிக்கும் தமிழா!!

தமிழனாய் பிறந்த
பெருமை அடைந்திடுவீர்
என்னாளுமே!!

Monday, January 15, 2007

காதலால்






என்றோ எழுதி வைத்த நினைவுகள்
இன்று நெஞ்சினில் ஆடுது தன்னாலே!!
எழுதிய நினைவுகள் யாவும் இன்று
காகித கப்பலாய் முழ்குது தன்னாலே!!
ரோஜாவும் இன்று தன்
முட்களால் குத்துது தன்னாலே!!


பழகிய நாட்களின்
ஈர கசிவு நெஞ்சினில்
இன்னும் இருக்க
உன் வயதும் என் வயதும்
கொஞ்சம் தடை சொல்ல
மூத்தவளே உனை
ஏன் நேசித்தேன்?


பள்ளி முடிந்து
நான் வீடு செல்ல மறந்து
சென்றேன் தோழனுடனே
சற்றே சுற்றி திரியவே

வீடு திரும்ப நாளியாக
தகப்பன் நின்றார் பிரம்போடு
செத்தோம் என்று நான் எண்ண
வந்தாய் நீயும் தெய்வமாய்
ஒரு போய் சொல்லி
எனைக் காப்பாற்றினாய்

அந்த சின்ன வயதினிலே
உன்னை எனக்கும் பிடித்தது
அதை மடலாய் எழுதி வைத்தேன்
உன்னிடம் கொடுப்பதற்க்கு!!


பிடுங்கி எரிந்தார்கள்
என் சகோதிரிகளே!!
அன்று சொல்லா
என் மனதை இன்றும்
சொல்ல துடிகின்றேன்

நீ இன்னும்
மண-மா(காதலால்)!!

Saturday, January 13, 2007

நீ வருவாயா?


இந்த மலரினில் தேனில்லை
அந்த வண்டுக்கும் கண்ணில்லை
வட்ட பூமியும் சுற்றவில்லை
நீ என்னை பிரிந்ததனாலே!!





என் காதலை சொல்ல வந்தேன்
தென்றலாய் மாறி வந்தேன்
சூரியனாய் சுட்டெரித்தாய்
அய்யோ கொடுமை பெண்ணே
!



என் அன்பே உன் இதயம் கல்லரையா
அதில் ஈரம் இல்லையா
என் காதல் வெறும் கனவா-இல்லை
தொடர்கதையா நீ சொல்லு ....


பூங்காற்றே நீ
தூது செல்வாயோ
என் காதலை
சொல்வாயோ
அவள் மனதைக் கரைப்பாயோ



அழகிய மலரிலும் முள்ளிருக்கும்
அந்த பகலிலும் நிலவிருக்கும்
உன் மனதில் காதல் வந்தால்
என்னை நான் மறப்பேனே



அழகே வந்துவிடு
உன் அன்பை வாரி தந்துவிடு
நீ வந்தால் வாழ்ந்திருப்பேன்
நீ சென்றால் உயிரினை மறப்பேன்

Thursday, January 11, 2007

மனிதா நீயே சொல்லாயோ

ஆறறிவு கொண்ட உயிர்-இங்கே
பாவத்தைக் குவிக்கிறதே
புண்ணியம் கொண்ட மண்ணில்-தினம்
இரத்தத்தை தெளிக்கிறதே
மதங்கள் என்ற பேரில்-மனித
உயிர்கள் அழிகின்றதே

எங்கேயும் உயிரின் தியாகம்
பூலோகம் என்ன ஆகும்
உன்னையே நீ அழித்தாய்
மிருகமாய் மாறி போனாய்
நடக்கும் துயரம் யாவுமே
தெய்வத்தின் கோபமா
தெய்வ கோபம் தீரவே
வழி ஏதும் உள்ளதோ
மனித மனித நீயே சொல்லாயோ

நீ கண்ட மதங்கள் யாவும்
அன்பையே வாரி வழங்கும்
அன்பென்ற சொல்லில் தானே
தெய்வமே வந்து போகும்
மதம் பிடித்த மனித உயிர்
கண்ணைக் கொஞ்சம் திறந்திடுமோ
அன்பென்ற வார்த்தையிலே
ஒன்று கூடி மகிழ்ந்திடுமோ
மனிதா மனிதா நீயே சொல்லாயோ

Wednesday, January 10, 2007

என் நண்பனே!

வாழ்க்கை ஒர் பூந்தோட்டம்
அதில் முள்ளும் உண்டு
மலரும் உண்டு
நண்பன் உண்டு
பகைவன் உண்டு
இன்பம் உண்டு
துன்பம் உண்டு
இதில் என்ன வேண்டும் நண்பா

காதலிக்கும் நேரத்திலே
காதலிலை அணைத்திருப்பாய்
காதலி பிரிந்து விட்டால்
போதையில் திலைத்திருப்பாய்
பள்ளிக்கூட நாட்களிலே
நண்பணோடு சேர்ந்திருப்பாய்
நண்பர் கூட்டம் பிரிந்துவிட்டால்
சோகத்தில் திலைத்திருப்பாய்

வாழ்கின்ற நாட்களிலே
நல்லதை நினைத்துவிடு
தர்மங்களைச் சேர்த்துவிடு
தெய்வ அருள் தேடிவிடு
இனிதே சிரித்துவிடு
நல்லதே நடக்கும் நண்பா

காதல் என்பது......

காதல் வெறும் கதையா
இல்லை வெறும் கனவா
என் அன்பே என் அன்பே
நீயே சொல்லு

அன்பென்றாய் உயிரென்றாய்
நீயில்லை வாழ்வென்றாய்
தவிக்கின்றேன் துடிக்கின்றேன்
நீ சொன்ன வார்த்தையிலே

அந்த மாலை பொழுதினிலே
அந்த மயங்கும் வேளையிலே
அந்த ஒவ்வொரு மணித்துளியும்
எந்தன் மரண படுக்கையிலும்
மறவேனே மறவேனே
எந்தன் கண்மணியே

மோகம் உண்டு காமம் உண்டு
காதல் இல்லையே
அழுதிட்டால் அணைத்திட்டால்
எல்லாம் பொய்யே
தனிமையைத் தேடி வந்தேன்
எல்லாம் உன்னாலே

Tuesday, January 9, 2007

அன்பே சிவம்

காதல் கொண்டு மனம் உருகி
மாலை மதுவில் தினம் கசிந்து
மயங்கியே சிற்றின்பம் கண்டு வந்தோம்!!
இது மட்டுமே வாழ்வல்ல
காணும் யாவும் நிஜமல்ல
பொய்மை உரைக்கும் பூவுலகில்
யாவும் அவனின் மாயையே!!

அறிவில் மிகுந்து மனிதகுலம்

கண்டதே பல ஏவுகணை

வஞ்சம் கொண்டு பலிதீர்க்க

உயிர்கள் அழிந்தே போரினிலே!!

அழிக்கும் கடமை தமதாக

மனிதன் அழிக்கும் விலங்காக

எழுந்தான் இன்று சிவனவனே

பொங்கும் கடலென

அழித்தான் இன்னும் பல உயிரை!!

கண் விழிக்குமோ மனித குலம்

வாழ்ந்திடுமோ இனி அன்பே சிவமென்று

நாளைய பொழுது அன்பிற்கினிய

தாகவிடிய வேண்டிடுவோம்!!

Monday, January 8, 2007

கவிதாஞ்சலி


அந்த பனிமூடும் சாலை-அங்கே
நீர் வடியும் ஒடை
அன்று பதித்த நம் கால் தடங்கள்
இன்றும் அழியவில்லை!!

கடந்து சென்ற நினைவுகளை
இன்று நினைத்துப் பார்க்கின்றேன்
நாம் அமர்ந்த அதே அழமரத்தடியினில்!!


காலங்கள் செய்த கோலங்களின்
வடுக்கள் இதயத்தில் இன்னும்
வழிக்கதான் செய்கின்றது!!


அழகிய உன் நினைவுகளே எனக்கு ஆறுதல்
மீண்டும் என்று வரும் அந்த வசந்தகாலம்?
உன் நினைவோடு நான் - வாழ்ந்திருப்பேன்


நிம்மதியாய் தூங்கு என் கண்மணியே!!
அடுத்த பிறப்பிலாவது- மரணம்வென்ற உறவை காண்போம்!!
இனிய நினைவுகளோடுஉனக்கு எந்தன் கவிதாஞ்சலி!!

Wednesday, January 3, 2007

கடவுள்




கண்ணுக்குத் தெரியாத
கடவுளின் தேடல்
மண்ணிலே
இன்னும் தொடருது


யாரும் காணாத
உருவம் ஒன்று
மனிதனை
மதம் பிடிக்க வைக்குது


நூறு-ஆயிரம் வசுல்கள்
தங்க ஆபரண அலங்காரம்
தரணியில் மனித பக்தியைக் காட்டுது

குண்டு வெடிப்பு
கோவில்களின் தகர்ப்பு
நரபலிகள் நாச வேலைகள்
எல்லாம் இங்கே
அவன் பேரில் தானே நடக்குது

பக்தி கொண்ட மனம்
வெளியே-வெளியே போகுது
போட்டு வந்தபுது செருப்பு
பக்தியைக் கொஞ்சம் மறக்க செய்யுது

Tuesday, January 2, 2007

நீர்




ஆழ்கடலின் ஆழத்தை
அறிந்தவனும் உண்டோ
கடல் அலையின் வேகத்தை
கண்டவரும் உண்டோ?



பூமியில்

நீரின் ஆதிக்கம்

நிலத்தினும்

பெரிது
அது பற்றாமல்
பேராசை நீரே

ஏன் அழித்தாயோ

எங்கள் மனித உயிரை










நீ இல்லா

இடமெங்கும் வரண்டு

கிடக்க!!

வரண்ட பூமியில்

நீ-இல்லாமல்

உயிர்கள் மடிய!!

அங்கு செல்லாமல்
ஏன் இங்கு வந்தாய்
அலை வெள்ளமாய்
எங்களை அழிப்பதற்கு!!

வணக்கம்


தரணியில் தமிழின் அழகை
தாலட்டிடும் தமிழ் மணமே
தமிழ் தேன் சுரக்க
தமிழ் பாடும் தமிழனே
தமிழனாய் உனக்குத் தலை வணங்குகிறேன்....