
கண்ணுக்குத் தெரியாத
கடவுளின் தேடல்
மண்ணிலே
இன்னும் தொடருது
யாரும் காணாத
உருவம் ஒன்று
மனிதனை
மதம் பிடிக்க வைக்குது
நூறு-ஆயிரம் வசுல்கள்
தங்க ஆபரண அலங்காரம்
தரணியில் மனித பக்தியைக் காட்டுது
குண்டு வெடிப்பு
கோவில்களின் தகர்ப்பு
நரபலிகள் நாச வேலைகள்
எல்லாம் இங்கே
அவன் பேரில் தானே நடக்குது
பக்தி கொண்ட மனம்
வெளியே-வெளியே போகுது
போட்டு வந்தபுது செருப்பு
பக்தியைக் கொஞ்சம் மறக்க செய்யுது

2 comments:
வாழ்த்துக்கள் கவிதை நல்லா இருக்கு
உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி சுதேசன்
Post a Comment